அசுரன்- படம் மட்டுமல்ல பாடம்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படமானது பூமணியின் வெக்கை நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 4-ம் தேதி ரிலீசாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள திரையரங்கு ஒன்றில் அசுரன் படத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பார்த்துள்ளார். படத்தை பார்த்து ரசித்த மு.க.ஸ்டாலின் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அசுரன்-படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தை சாடும் சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கு, வாழ்ந்து காட்டியிருக்கும் தனுசுக்கு பாராட்டுக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
#Asuran – படம் மட்டுமல்ல பாடம்!
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் pic.twitter.com/i6PYyRTPfV
— M.K.Stalin (@mkstalin) October 17, 2019