இயக்குனர் வசந்த் எழுதி, இயக்கிய “நீ பதி நான் பதி” திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியானது. கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரஹ்மான், கௌதமி, ஹீரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ஜெய்சங்கர், டெல்லி கணேஷ், கணேஷ்கர் சுலக்ஷனா, கே.எஸ்.ஜெயலட்சுமி துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் தலைப்பு ‘கேளடி கண்மணி’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நீ பதி நான் பதி’ பாடலை குறிக்கிறது. கேளடி கண்மணி படத்தை இயக்குனர் வசந்த் தான் இயக்கியிருக்கிறார். இந்நிலையில், இந்த பாடலின் தலைப்பை தனது அடுத்த படத்தின் தலைப்பாக வைக்க முடிவு செய்து இந்த படத்தை எடுத்துள்ளார். அதாவது, கேளடி கண்மணி படம் 1990-ல் வெளியானது, இதற்கு அடுத்த ஆண்டு 1991ல் நீ பதி நான் பதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேளடி கண்மணி படத்தில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்திருந்தார், கேளடி கண்மணி திரைப்படம் இயக்குனர் வசந்த் சினிமா வாழ்க்கையில் இயக்கிய முதல் திரைப்படமாகும். இப்படத்தின் கதை நன்றாக இருந்ததால், 285 நாட்கள் ஓடியதாக கூறப்படுகிறது. ஆனால், திருமணமாகாத தாயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கேளடி கண்மணி படத்திற்கு பிறகு, அந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான ‘நீ பதி நான் பதி’ என்ற படத்தை இயக்கினார்.
படத்தின் கதைப்படி, ரஹ்மான் (நந்தா) ஒரு இளம் பட்டதாரி, நீதிபதியின் முறைகேடான மகள் கௌதமி (நிவேதா)வை காதலிக்கிறார். நந்தாவின் தந்தை இந்த விஷயத்தை அறிந்து கொண்டு, நிவேதாவின் வளர்ப்பு அம்மா மனோரமா (வேதவல்லி)க்கு அறிமுகப்படுத்த ஒரு நாடகத்தை ஏற்பாடு செய்கிறார். என்ன கரணம் என்று தெரியாமல், சில மாதங்களுக்கு பின், நந்தாவின் தந்தை நிவேதாவுடன் ஓடிப்போகச் சொல்லி பணம் கொடுக்கிறார்.
இதற்கிடையில், சட்டவிரோத மனைவி, ராமசாமி (ஜனகராஜ்) அறியப்படாத கணவரின் கைகளில் இருந்து அந்த நடத்திற்காக பரிசளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. நிவேதா நந்தாவுடன் ஓடிப்போகும்போது, விருது வழங்கும் விழா நடக்கிறது. பின்னர், விருதிற்காக அழைக்கப்பட்ட வளர்ப்பு அம்மா வேதவல்லி, தனது மகளின் ஓடிப்போன திருமணத்தை ஏற்க முடியாமல் இறந்து போகிறார். பின்னர், தம்பதிகள் ஓடிபோகும் கார் விபத்துக்குள்ளாகிறது, சில மாதங்கள் கடந்து செல்கின்றன. தம்பதிகள் ஊட்டியில் தங்குகிறார்கள், அங்கு சில நாட்கள் கடந்த போக, ஹீரா (மது) நந்தாவை காதலிக்கிறார்.
அப்போதுதான் விபத்துக்குப் பிறகு நிவேதா மனவளர்ச்சி குன்றியவராக மாறியதாகக் காட்டப்படுகிறது. நந்தா தனது வாழ்க்கையில் மதுவை உறுதியாக எதிர்த்தாலும், அவன் வீட்டில் இல்லாத நேரத்தில் நிவேதாவைக் கவனித்துக் கொள்ள உதவி செய்து வந்தார். பின்னர், உடல்நலக்குறைவு காரணமாக, நந்தா நிவேதாவை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். சிகிச்சையின் போது, அதிசயமாக, நிவேதா முழுமையாக குணமடைகிறார்.
அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும், நந்தா மூலம் தான் கர்ப்பமாக இருப்பதை மதுவுக்குத் தெரிந்தும், அதை மறைக்க முடிவு செய்கிறாள். பின்னர், நிவேதாவுடன் நந்தாவின் திருமண நாளில், இந்த விஷயம் நிவேதாவுக்கு தெரியவர திருமணத்தை முறித்துக் கொள்ள நிவேதா முடிவு செய்கிறார். இறுதியில், நந்தா மதுவை மணக்கிறார், இப்படி சம்பந்தம் இல்லாத காதல் கதையால் இந்த திரைப்படம் தோல்விக்கு முக்கிய புள்ளியாக அமைந்தது.
இந்நிலையில், 1991ல் இதே நாளில் வெளியான இந்த திரைபடம் 32 வருடங்கள் நிறைவு செய்துள்ளது. தனது முதல் படத்தின் வெற்றியை தக்கவவைத்துக்கொள்ள தெரியாமல், படத்தின் கதையில் கோட்டவிட்டதால், இந்த திரைப்படம் தோல்வியை தழுவியது. ஆனால், கேளடி கண்மணி படத்திற்கு பிறகு, ஆசை, நேருக்கு நேர், ரிதம் மற்றும் சத்தம் போடாதே போன்ற படங்களை இயக்கி அந்த படங்களின் மூலம் தனது பெயரையும் புகழையும் தக்கவைத்து கொண்டார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…