சமந்தா குறித்து தப்பாக பேசிய அமைச்சர்! ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர நாகார்ஜுனா முடிவு?
சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய சுரேகா மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர உள்ளோம் என நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை : சமந்தா -நாகசைதன்யா விவாகரத்து பற்றி சர்ச்சைக்குரிய வகையில், அமைச்சர் சுரேகா பேசியது பெரும் பேசுபொருளாகியுள்ளது. சர்ச்சையான பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டாலும் கூட இன்னும் இந்த விவகாரம் நின்றபாடு இல்லை. பல பிரபலங்கள், அவருடைய பேச்சுக்கு எதிராக தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
பேசிவிட்டு அதன்பிறகு மன்னிப்பு கேட்டால் மன்னித்துவிடக்கூடாது, இனிமேல் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதால் நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா அமைச்சர் கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கெளரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
Read More- சமந்தா விவாகரத்து பற்றி அமைச்சர் சுரேகா அவதூறு பேச்சு! வழக்கு தொடர்ந்த நாகர்ஜுனா?
இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து இந்த விஷயத்தில் அமைச்சர் சுரேகாவை சும்மா விடக்கூடாது என திட்டமிட்டு அவர் மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர நாகர்ஜுனா திட்டமிட்டு இருப்பதாகவும் அவரே தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதற்கான காரணம் பற்றியும் அவர் வெளிப்படையாகவே பேசியும் இருக்கிறார்.
இது குறித்து அந்த பேட்டியில் நாகர்ஜுனா பேசியதாவது “நேற்று சுரேகா மீது ஒரு கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தோம். மேலும் அவர் மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர உள்ளோம். அவருடைய கருத்துக்களை எப்போதும் மன்னித்துக்கொள்ள முடியாத விஷயம்.
இந்த விஷயத்தில் அமைச்சர் தனது கருத்தை திரும்பப்பெறுவதாக கூறியுள்ளார். அவர் சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டதாகத் தெரிகிறது.ஆனால், எங்களுடைய குடும்பத்திடம் அவர் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை” எனக் கூறியுள்ளார். ஒரு வேலை மன்னிப்பு கேட்டால் வழக்கு தொடரமாட்டீர்களா? என கேள்வி கேட்டதற்கு மன்னிப்பு கேட்டாலும் வழக்கு தொடர்வோம்” என நாகர்ஜுனா அதிரடியான பதிலைத் தெரிவித்தார்.