Manjummel Boys: மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவில் மிகவும் பெரிதாக பேசப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட இயக்குனரை நடிகர் சியான் விக்ரம் பாராட்டியுள்ளார். இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இரண்டாவது வரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
முன்னதாக, கமல் நடித்த குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலையும் இப்படத்தில் இடம் பெற செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவ்வாறு படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மலையாள சினிமாவிற்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள முக்கிய திரைபிரபலங்கள் இந்த படத்திற்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் படக்குழு சென்னையில் கமல்ஹாசனை சந்தித்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் நேரில் அழைத்து படத்தினை பாராட்டி பேசி உள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சியான் விக்ரமை சந்தித்துள்ளார் போல் தெரிகிறது. ஆம், இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து விக்ரம் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தப் படம், கொடைக்கானலுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் கேரளாவின் மஞ்சும்மல்லைச் சேர்ந்த நண்பர்களில் ஒருவர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் இருந்து குகைக்குள் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் குழுவைச் சுற்றி வரும் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் திரைப்படம். விரைவில் இந்த படத்தை தெலுங்கிழும் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…