வின்டேஜ் AK இஸ் பேக்! “அழகே அஜித்தே”…கொண்டாடும் ரசிகர்கள்!
குட் பேட் அக்லி படத்திலிருந்து அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை அஜித் குமார் என்று மட்டும் அழைத்து கொள்ளுங்கள் க….அஜித்தே என்று அழைப்பதை நிறுத்துங்கள் என கூறிய நிலையில், அடுத்ததாக என்ன பெயர் வைத்து அஜித்தை அழைக்கலாம் என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். அப்படி யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி அவருக்கு புதிய பெயரை வைக்கும் அளவுக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.
அதன்படி, குட் பேட் அக்லி படத்தில் அஜித் தற்போது நடித்து வருவது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். இந்த படத்தில் எத்தனை கெட்டப்களில் அஜித் நடிக்கிறார் என்பதே ஒரு பெரிய கேள்வி குறியாக உள்ளது ஏனென்றால் ஏற்கனவே அஜித் இந்த படத்தில் நடிக்கும் இரண்டு லுக் புகைப்படங்கள் வெளியாகிவிட்டது. அதனை தொடர்ந்து இப்போதும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் அமர்க்களம் படத்தில் அஜித் எப்படி இருந்தாரோ அப்படியான ஒரு லுக்கிலும், தீனா படத்தில் இருந்த லுக்கையும் கலந்து ஒரு அசத்தலான லுக்கில் இருந்ததால் இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாகி படத்தில் என்னதான் சர்ப்ரைஸ் இருக்கிறது? என்கிற வகையில் சந்தோஷமடைந்த விட்டார்கள்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் க..அஜித்தே என்று தானே சொல்லக்கூடாது அழகனே அஜித்தே என்று கூப்பிடலாமே என கூறி வருகிறார்கள். மேலும், குட் பேட் அக்லி படம் முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே சமயம் விடாமுயற்சி படமும் வெளியாகவுள்ளதால் குட் பேட் அக்லி மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.