1994-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி லயன் கிங்’. இப்படம் தற்போது, 3டி அனிமேஷன் திரைப்படமாக, தமிழ்,தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் இப்படம் ரிலீசாகி ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூலின் மூலம் இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஹாலிவுட் திரைப்படங்களில் 4-வது திரைப்படமாக இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
unknown node