Categories: சினிமா

ச்ச…ச்ச… இருக்காது.! கேம் ஆப் த்ரோன்ஸ் போஸ்டரை காப்பியடித்த லியோ படக்குழு.?

Published by
கெளதம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலானாலும், சில நெட்டிசன்கள் அதை பிரபல ஆங்கில தொடரான கேம் ஆப் த்ரோன்ஸ் போஸ்டருடன் உடன் ஒப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

vijay jhon snowvijay jhon snow
vijay jhon snow [Image source : Twitter/@Chrissucces]s

ட்விட்டரில் உள்ள சில திரைப்பட ஆர்வலர்கள் லியோ மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் ஜான் ஸ்னோ கேரட்டரின் போஸ்டரரை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர். மேலும், அந்த போஸ்டர்களும் ஒரே பின்னணியை கொண்டுள்ளது. ஆம், லியோ போஸ்டரில் தளபதி விஜய் தனது  ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அவதாரத்தில் காணப்பட்டார், கையில் ரத்தம் தடவிய ஸ்லெட்ஜ்ஹாம்மருடன் அவருக்குப் பின்னால் ஓநாய் இருக்கிறது.

Leo First LookLeo First Look
Leo First Look [Image source : Twitter/@Dir_Lokesh]

லியோ படத்தின் முதல் சிங்கிள் நா ரெடி இன்று மாலை 6.30 மணிகி வெளியாக உள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஜய்யின் குரலில் தாறுமாறாக அமைந்துள்ள பாடல் ரசிகர்களை பெரிதும் குஷிப்படுத்தியுள்ளது. உடனே, இது காப்பியடிக்கப்பட்டதா என்று கருத்துக்கள் எழுந்தது. சில முக்கிய நடிகர்கள் படங்கள் வெளிவரும் போது, இது போன்ற நெகடிவ் கருத்துக்கள் வெளியாவது வழக்கம் தான்.

LeoFirstSingle [Image Source : @7screenstudio]

படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago