இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருக்கு வயது 47. பவதாரிணி தனது தந்தை இசையில் ஒளியிலே தெரிவது தனது சகோதரர் யுவன் இசையில் ‘தாலியே தேவையில்லை’ உள்ளிட்ட பல பாடல்களை பாடி இருக்கிறார்.
குறிப்பாக தந்தை இளையராஜா இசையமைப்பில் வெளியான பாரதி என்ற படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை பாடி இருந்ததற்காக பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது. பவதாரிணி தங்களுடைய குடும்பங்களை தாண்டி மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பல பாடல்களை பாடி இருக்கிறார்.
அந்த வகையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனேகன் படத்தில் இடம்பெற்றிருந்த ஆத்தாடி ஆத்தாடி பாடலை பவதாரணி தான் பாடியிருந்தார். அதேபோல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான இரும்பு குதிரை திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த பெண்ணே பெண்ணே என்ற பாடலை அவர்தான் பாடியிருந்தார். அதேபோலவே பிரபல பாடகர் கார்த்தி அவர்கள் முதலில் அரவான் படத்திற்கு இசைமைத்து இருந்தார்.
காவியத் தலைவன்…ராமர் கோயில் விழா குறித்த பேசிய இயக்குனர் மிஷ்கின்!
அந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த உன்னை கொல்ல போகிறேன் என்ற பாடலை பவதாரிணி தான் பாடியிருந்தார். அதனைப் போலவே தேனிசைத் தென்றல் தேவா இசையில் வெளியான நேருக்கு படத்தில் துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது என்ற பாடல் பாடி இருக்கிறார்.
இசையமைப்பாளர் சிற்பி இசையில் தேடினேன் வந்தது என்ற திரைப்படத்தில் ஆல்ப்ஸ் மழைக்காற்று என்ற டூயட் பாடலை அவர்தான் பாடியிருந்தார். அவருடைய பல பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது சில பாடல்கள் underrated-ஆகவும் இருக்கிறது. இவருடைய மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இன்று அவருடைய உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…