Categories: சினிமா

தி கேரளா ஸ்டோரி பட இயக்குனர் சுதிப்தோ சென் மருத்துவமனையில் அனுமதி.!

Published by
கெளதம்

இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் மே 5ஆம் தேதி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியைத் தாண்டி சாதனை படைத்தது.

தற்போது ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென், படத்துக்கான விளம்பர பயணங்கள் காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் குணமடையும் வரை பல்வேறு நகரங்களுக்கு வரவிருக்கும் அனைத்து விளம்பரப் பயணங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த படமானது ஹிந்தி மட்டுமின்றி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது. ஆனால், தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Published by
கெளதம்

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

3 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

3 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

4 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

5 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

6 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

7 hours ago