த்ரிஷா விவகாரம்: முன்ஜாமின் கேட்ட மன்சூர் அலிகான்.! உத்தரவை தள்ளிவைத்த நீதிபதி.!
த்ரிஷாவை அவதூறாக பேசிய புகாரில் மன்சூர் அலிகானின் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, முன் ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்த மன்சூர் அலிகான், த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு இன்று அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், முன்னதாக முன் ஜாமின் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாலியா பேசினேன் த்ரிஷா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க! மன்சூர் அலிகான் பேட்டி
உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை. நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என மன்சூர் அலிகான் தரப்பு வாதிட, மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பு விளக்கமளித்துள்ளது.
என்னை மன்னித்துவிடு…த்ரிஷா விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டார் மன்சூர் அலிகான்!
இதனையடுத்து, த்ரிஷாவை அவதூறாக பேசிய புகாரில் மன்சூர் அலிகானின் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி பிறப்பித்துள்ளார்.