பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தாவுக்கு அடித்த ஜாக்பாட்.!
தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வந்து சீசனில், கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா . இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது அவருக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நடிகை சம்யுக்தா விஜயின் 66-வது படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஷ்யாம், ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது சம்யுக்தா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Samyuktha joins the cast of #Thalapathy66. Welcome aboard!@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/CQB5CNGMAL
— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022