என்னடா இது ஆண்டவருக்கு வந்த சோதனை! என்ன மணிரத்னம் நீங்களுமா?
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கு சினிமா துறையை தாண்டி அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதன் முறையாக நாயகன் படத்திற்காக இணைந்த கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இணைந்துள்ள ‘KH234’ என்று அழைக்கப்பட்ட Thug Life (தக் லைப்) படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல படம் கண்டிப்பாக தரமாக இருக்கும் என்று தெளிவாக தெரிகிறது. இந்த படத்துக்கு Thug Life (தக் லைப்) என்று பெயரிடப்பட்ட க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
#ThugLife
https://t.co/IqKhCT3TWv#ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM @dop007 @sreekar_prasad @anbariv #SharmishtaRoy @amritharam2 @ekalakhani… pic.twitter.com/gABxzVOcDW— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2023
ஆனால், அது சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை, அதாவது இப்படத்தின் டைட்டில் வீடியோ 2019ல் வெளியான ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இது தொடர்பான, இரண்டு படங்களின் காட்சிகளையும் ஒன்றாக சேர்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
Rise of skywalker Thuglife (2024)
(2019) pic.twitter.com/kQB20aDgJO— кαι ρυℓℓα (@KPM_Offi) November 6, 2023
கமலின் ‘தக் லைப்’ டைட்டில் வீடியோ ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பியா?
இந்த நிலையில், நேற்று வெளியான Thug Life டைட்டில் வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவரும் நிலையில், 2019ம் ஆண்டு வெளியான “Rise of skywalker” என்ற ஆங்கில படத்தில் இடம் பிடித்திருந்த காட்சிகள், இதிலும் அப்படியே காப்பி அடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு நெட்டிசன்கள் என்னடா இது ஆண்டவருக்கு வந்த சோதனை என கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுபோல், சில இயக்குனர்கள் தான் இப்படி ஏதாச்சும் புதுசா செய்வதாக முயற்சி செய்வார்கள். ஆனால், இறுதியில் அது காப்பி என்று தெரிந்துவிடும். தற்போது, இந்த லிஸ்ட்ல பிரம்மாண்ட இயக்குனராகிய நீங்களும் இணைந்து விட்டீர்களா மணிரத்னம் சார்? என்று கலாய்த்து வருகிறார்கள்.
Thug Life (தக் லைப்)
நடிகர் கமலுடன் இந்த படத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகரின் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னதாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும். படத்திற்கான மற்ற வேலைகள் மட்டும் இப்போது ஆரம்பம் ஆகும். ஏன்னென்றால், இதற்கு முன், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள KH234 படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.