தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் இந்த கங்குவா திரைப்படமும் உள்ளது. படத்திற்கான படப்பிடியுப்பு மும்மரமாக கடந்த ஆண்டில் இருந்தே நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிந்ததாக கூறப்படுகிறது. தற்போது கங்குவா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியதாக நடிகர் சூர்யா அறிவித்து இருந்தார். இருப்பினும் படத்திற்கான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் நடிகர் சூர்யா கங்குவா படத்தை எடிட் செய்தவரை பார்த்துவிட்டு கூறிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்படி, கங்குவா திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவாவை கட்டியணைத்து பாராட்டினாராம். பாராட்டிவிட்டு சின்ன வருத்தமாக படத்தின் VFX காட்சிகள் சற்று சரியாக இல்லை என்று கூறிவிட்டாராம். சில இடங்களில் VFX காட்சிகள் நம்பக்கூடிய வகையில் இல்லை என்பதால் அந்த காட்சிகளை உடனடியாக மீண்டும் VFX காட்சிகள் வைத்து செய்யும்படி கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா இப்படி கூறிய காரணத்தினால் தான் படத்தின் VFX வேலைகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் இதனால் தான் படத்தின் ரிலீஸ் செய்தியும் தள்ளி செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவை அனைத்தும் முடித்த பிறகே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…