அது சரியில்லை மாத்துங்க! ‘கங்குவா’ படத்தை பார்த்து வருத்தப்பட்ட சூர்யா!

kanguva
Kanguva இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் இந்த கங்குவா திரைப்படமும் உள்ளது. படத்திற்கான படப்பிடியுப்பு மும்மரமாக கடந்த ஆண்டில் இருந்தே நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிந்ததாக கூறப்படுகிறது. தற்போது  கங்குவா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.

READ MORE – அம்பானி வீட்டு திருமணம்: பாடகி ரிஹானா வாங்கிய பிரமாண்ட சம்பளம்?

சமீபத்தில் கூட படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியதாக நடிகர் சூர்யா அறிவித்து இருந்தார். இருப்பினும் படத்திற்கான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.  இதற்கிடையில் நடிகர் சூர்யா கங்குவா படத்தை  எடிட் செய்தவரை பார்த்துவிட்டு கூறிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி, கங்குவா திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவாவை  கட்டியணைத்து பாராட்டினாராம். பாராட்டிவிட்டு சின்ன வருத்தமாக படத்தின் VFX காட்சிகள் சற்று சரியாக இல்லை என்று கூறிவிட்டாராம். சில இடங்களில் VFX காட்சிகள் நம்பக்கூடிய வகையில் இல்லை என்பதால் அந்த காட்சிகளை உடனடியாக மீண்டும் VFX காட்சிகள் வைத்து செய்யும்படி கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

READ MORE – அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்!

நடிகர் சூர்யா இப்படி கூறிய காரணத்தினால் தான் படத்தின் VFX வேலைகள் தற்போது மும்மரமாக  நடைபெற்று வருவதாகவும் இதனால் தான் படத்தின் ரிலீஸ் செய்தியும் தள்ளி செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவை அனைத்தும் முடித்த பிறகே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்