கூலி படத்தை இயக்க லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நெல்சனை மிஞ்சிட்டாரே!

Published by
பால முருகன்

Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படும். அந்த வகையில், ரஜினியை வைத்து ஜெயிலர் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கி இருந்த இயக்குனர் நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டதாம். ஆனால், தற்போது நெல்சன் சம்பளத்தையே லோகேஷ் கனகராஜ் மிஞ்சுவிட்டாராம்.

லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து “கூலி”  படத்தினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது. இந்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் சம்பளமாக 60 கோடி வாங்கி இருக்கிறாராம்.

இதற்கு முன்னதாக ரஜினிகாந்தை வைத்து “ஜெயிலர்” படத்தை இயக்கிய நெல்சனுக்கு 50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், அவரை விட லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, “லியோ” படத்தை இயக்குவதற்காக முதலில் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளமாக 8 கோடி தான் கொடுப்பதாக தயாரிப்பாளர் லலீத் குமார் பேசி இருந்தாராம்.

அந்த சமயம் ரஜினியின் “ஜெயிலர்” படத்தை இயக்குவதற்கு நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி கொடுப்பட்டு இருந்த நிலையில், இதனை காரணம் காட்டி லோகேஷ் கனகராஜ் “லியோ” படத்துக்கு சம்பளத்தை தயாரிப்பாளரிடம் கேட்டாராம். அதன்பிறகு தான் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளமாக லலீத்குமார் 22 கோடி கொடுத்தாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

 

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…

4 minutes ago

அதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…

46 minutes ago

குறைந்தது வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் வணிகர்கள்!

சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…

1 hour ago

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…

2 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

9 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

11 hours ago