கூலி படத்தை இயக்க லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நெல்சனை மிஞ்சிட்டாரே!
Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படும். அந்த வகையில், ரஜினியை வைத்து ஜெயிலர் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கி இருந்த இயக்குனர் நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டதாம். ஆனால், தற்போது நெல்சன் சம்பளத்தையே லோகேஷ் கனகராஜ் மிஞ்சுவிட்டாராம்.
லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து “கூலி” படத்தினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது. இந்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் சம்பளமாக 60 கோடி வாங்கி இருக்கிறாராம்.
இதற்கு முன்னதாக ரஜினிகாந்தை வைத்து “ஜெயிலர்” படத்தை இயக்கிய நெல்சனுக்கு 50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், அவரை விட லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, “லியோ” படத்தை இயக்குவதற்காக முதலில் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளமாக 8 கோடி தான் கொடுப்பதாக தயாரிப்பாளர் லலீத் குமார் பேசி இருந்தாராம்.
அந்த சமயம் ரஜினியின் “ஜெயிலர்” படத்தை இயக்குவதற்கு நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி கொடுப்பட்டு இருந்த நிலையில், இதனை காரணம் காட்டி லோகேஷ் கனகராஜ் “லியோ” படத்துக்கு சம்பளத்தை தயாரிப்பாளரிடம் கேட்டாராம். அதன்பிறகு தான் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளமாக லலீத்குமார் 22 கோடி கொடுத்தாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.