இயக்கிய எல்லா படமும் ஹிட்டு! ‘தலைவர் 171’ படத்திற்காக லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

rajinikanth lokesh kanagaraj

LokeshKanagaraj  தமிழ் திரைஉலகில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அவருக்கு கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. கைதி படத்தையும் அவர் அற்புதமாக இயக்கி இருந்த காரணத்தால் இந்த படமும் மிக்பெரியா ஹிட் ஆனது.

read more- பப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்…LCU கேக் வெட்டிய லோகேஷ்.!

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயை வைத்து அவருக்கு மாஸ்டர் திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு விக்ரம் படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மீண்டும் லியோ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு லோகேஷ் கனகராஜிற்கு கிடைத்தது.

READ MORE – மக்களே பிரேமலு படம் ஓடிடிக்கு வருது! எப்போது தெரியுமா?

இதுவரை அவர் இயக்கிய எல்லா படங்களுமே மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் தோல்வி படங்கள் கொடுக்காத இயக்குனர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார். தற்போது அவர் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171-திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளமாக வாங்கிய தொகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

READ MORE – செம!! விஜய்யை பாலோ செய்த சிவகார்த்திகேயன்…ஹவுஸ் புல்லான மண்டபம்.!

அதன்படி, இந்த தலைவர் 171-திரைப்படத்தை இயக்குவதற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளமாக 60 கோடி வரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக அவர் லியோ படத்தை இயக்கியதற்காக 20 லிருந்து 25 கோடி வரை சம்பளம் வாங்கி இருந்தார். தற்போது அதெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் சம்பளம் வாங்கி இருக்கிறார்.  மேலும் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 38-வது பிறந்தாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்