சினிமா

முரட்டு சம்பவம் செய்ய காத்திருக்கும் கமல்! விக்ரம் 2 முதல் தக் லைஃப் வரை லைன் அப் இதோ!

Published by
பால முருகன்

இன்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 69-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து,  அவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள் மற்றும் அவர் நடிக்க கமிட் ஆகி இருக்கும் லைன் அப் குறித்த  விவரங்களை விவரமாக பார்க்கலாம்.

இந்தியன் 2

கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த  திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே, கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பு பெற்று ஹிட்டாகி இருக்கும் நிலையில் தற்போது  இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும்  மும்மரமாக  நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி 2898 கி.பி

பிரபல இயக்குனரான நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898 கி.பி’. இந்த திரைப்படத்திலும் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபாஸ், துல்கர் சல்மான், தீபிகா படுகோன், திஷா பதானி, ராணா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிக்கும் கமல்ஹாசன் உடைய போஸ்டரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

தக் லைஃப்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 34 வருடங்களுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைஃப் ‘ என்ற  திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த திரைப்படம் கமல்ஹாசனின் 234 வது திரைப்படம். இந்த திரைப்படத்தின் சின்ன டீசர் கூட சமீபத்தில் வெளியாகி படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

KH233

சதுரங்க வேட்டை , தீரன் அதிகாரம், வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எச்,வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் தன்னுடைய 233 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு KH233 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும்  விரைவில் தொடங்கப்பட உள்ளது.

விக்ரம் 2

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி தமிழ் சினிமாவையே  திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் விக்ரம் என்று கூறலாம். ஏனென்றால் கமல்ஹாசன் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தரமான கம்பேக்கை  இந்த திரைப்படத்தின் மூலம் கொடுத்தார். இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிகர் கமல்ஹாசன்  நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

தொடர்ச்சியாக இப்படியான பெரிய படங்களில் நடிக்க கமல்ஹாசன் கமிட்டாகி உள்ள காரணத்தினால் கண்டிப்பாக வரும் ஆண்டுகளில் கமல்ஹாசன் மார்க்கெட் இன்னுமே உயர்த்திற்கு செல்ல போகிறது என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

6 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

8 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

9 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

10 hours ago