Andrea Jeremiah நடிகை ஆண்ட்ரியாவை பொறுத்தவரையில், தன்னுடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் வகையிலும், படமும் பெரிய அளவில் பேசப்படும் வகையிலும் இருக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். கதைக்கு எப்படி பட்ட காட்சிகள் தேவைப்பட்டாலும் கூட அவர் அந்த கதைக்காக நடித்து விடுவார் என்று கூட கூறலாம். இது அவர் முன்னதாக நடித்த படங்களை வைத்து பார்த்தாலே தெரியும்.
இருப்பினும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம். கடைசியாக தமிழில் அவருக்கு அனல் மேல் பனித்துளி திரைப்படம் தான் வெளியாகி இருந்தது. அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லவேண்டும்.
அந்த படத்திற்கு பிறகு ஆண்ட்ரியாவுக்கு தமிழில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. எனவே, ரசிகர்கள் அனைவரும் ஆண்ட்ரியா நடித்த படம் எப்போது வெளியாகும் என காத்திருந்தார்கள். அவர்களுக்காகவே 2 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஆண்ட்ரியாவின் திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது. அவர் தற்போது கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் நாஞ்சில் என்பவர் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடுகாட்டிற்குள் இரவு நேரங்களில் படங்களில் நடிப்பதற்கு என்றால் தனி தைரியம் வேண்டும். ஆண்ட்ரியா இப்படி நடித்துள்ள தகவலை அறிந்த ரசிகர்கள் உங்களுக்கு செம தில்லு மேடம் என அவரை பாராட்டி வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படம் வரும் மார்ச் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…