லால் சலாம் திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில், படத்தின் வசூல் குறைய தொடங்கி இருக்கிறது. இயக்குனர் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடித்திருந்த முக்கிய காரணமே படத்தின் ப்ரோமோஷன் மற்றும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக வைத்தது. படமும் எதிர்பார்த்த அளவிற்கு இருந்த காரணத்தால் படம் வெளியான நாளில் இருந்து சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்மறையான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவே கூறி வருகிறார்கள்.
லால் சலாம் படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!!
இந்நிலையில், படத்தில் ரஜினிகாந்தும் முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்த காரணத்தால் படத்தின் ஓப்பனிங் பற்றி எந்த கவலையும் இல்லை என படக்குழுவினர் நினைத்தனர். வெளியான முதல் நாளில் படம் உலகம் முழுவதும் 4 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதன்பிறகு அப்படியே படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.
வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி லால் சலாம் வெளியான 4 நாட்களில் 11 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாம். 4-வது நாளில் மட்டும் உலகம் முழுவதும் 1 கோடி வரை வசூல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்யுமா இல்லையா என்பதனை பார்க்கலாம்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…