Ajith - Vadivelu [file image]
Vadivelu: நடிகர் வடிவேலு உடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என அஜித் குமார் சொன்ன அதிர்ச்சி தகவலை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், 20 வருடங்களுக்கு மேலாக ஆகியும் இன்று வரை வைகை புயல் வடிவேலு உடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் வடிவேலுவுடன் கடைசியாக ராஜா படத்தில் நடித்துள்ளார்.
கதைக்கு ஏற்றார் போல் வடிவேலு அஜித்தின் மாமாவாக நடித்ததால் அஜீத்தை மரியாதை இல்லாமல் வாடா…போடா… என்ற பேசியுள்ளார். ஷூட்டிங் முடிந்த பின்னும் வடிவேலு வாடா போடா என பேசி விளையாடி கிண்டல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இது அஜித்துக்கு பிடிக்கவில்லை என்றும், அது இருவருக்குள்ளும் ஈகோ மோதலாக மாறியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் மட்டுமின்றி, மற்ற சமயங்களிலும் வடிவேலு அஜித்தை ‘வாடா’ மற்றும் போடா’ என்று அழைத்ததால் முகம் சுளித்து போன அஜித், இயக்குனரை அழைத்து இவ்வாறு சொல்ல வேண்டாம் என அவரிடம் சொல்லுங்க என்று எடுத்து கூறிஉள்ளார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் வடிவேலுவிடம் பேசியதாகவும் தெரிகிறது. ஆனால், தன்னை மாற்றிக் கொள்ளாத வடிவேலு, அஜித்துடன் அதையே போக்கில் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், படப்பிப்பு முடியும் வரை காத்திருந்த அஜித், இந்த படத்தை தொடர்ந்து வேற எந்த இயக்குனர் கதை சொல்ல வந்தாலும், படத்தில் வடிவேலு கதாபாத்திரம் இருந்தால்? அவரா என கூறிவிட்டு அந்த படத்தில் நடிக்க மறுத்து விடுவாராம்.
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…