நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு அபராதத்துடன் தள்ளுபடி!

mansoor ali khan

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். திரிஷா குறித்து அவதூறு பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.

தலா 1 கோடி ரூபாய் வேண்டும்.! திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் வழக்கு.!

அதன்பிறகு தான் அளித்த அந்த பேட்டியை முழுதாக பார்க்காமல் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் கண்டனம் தெரிவித்து விட்டனர் என கூறி திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் தலா 1 கோடி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை சென்னை நிதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு, அதை அவதூறாக கருத முடியாது என கூறி தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation