மீண்டும் தனது நடிப்பை தொடரும் தூத்துக்குடிபட நாயகி
தூத்துக்குடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கார்த்திகா.
தூத்துக்குடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கார்த்திகா. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் கருவாப்பையா கருவாப்பையா எனும் பாடல் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கார்த்திகா.
இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் மதுரை சம்பவம், ராமன் தேடிய சீதை, தைரியம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இந்நிலையில் இவரின் தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் தங்கி படிப்பை கவனித்து வருகிறாராம். தங்கையின் படிப்பு தற்போது முடிந்து விட்ட நிலையில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம். மேலும் இவர் நல்ல கதைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.