சிகை படம் திரையிடப்படவில்லை சோகத்தில் நடிகர் !!!!
சமீபத்தில் திரைக்கு வந்த படம்’ பரியேறும் பெருமாள் ‘ இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் கதிர். மேலும் இந்த படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தை காலா பட இயக்குனர் ரஞ்சித் என்பவர் தயாரித்துள்ளார். மேலும் இந்த படம் சிறந்த படத்திற்க்கான விருதை அண்மையில் பெற்றது.
மேலும் இந்த படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்த கதிர் என்பவர் அடுத்ததாக நடித்த படம்’ சிகை ‘.இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
‘சிகை’ படம் பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை சமூகத்தில் சந்திகின்றார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த படத்தை திரையுடமுடியாது என்ற காரணத்தினால் தயாரிப்பாளர் ஜி 5 ஆப்பிற்கு இந்த படத்தை விற்றுள்ளார்.
சஸ்பென்ஸ் கிரைம் படமாக இருப்பதால் இதனை யாரும் வாங்க வில்லை என தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதனால் தயாரிப்பாளர் ஜி 5 ஆப்பிற்கு விற்று விட்டேன் என கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிட்டுருந்தால் ராட்சஸன் படம் போல ஹிட்டாகியிருக்கும் என்று அவரின் நண்பர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் நடிகர் கதிர் மிகுந்த மனக்கவலையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.