நாகார்ஜுனா : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் நாகார்ஜுனா தற்போது தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபத்திற்கு விமானம் மூலம் தனுஷ், நாகார்ஜுனா நேற்று சென்றார்கள்.
அப்போது விமான நிலையத்தில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தது. அது என்னவென்றால், நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இருவரும் நடந்து கொண்டு செல்லும்போது நாகார்ஜுனா தீவிர வயதான ரசிகர் ஒருவர் கையை பிடித்து அவரை சந்திக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த பாதுகாவலர் இறக்கம் கூட இல்லாமல் அந்த வயதானவரை தள்ளிவிட்டார்.
தள்ளிவிட்டதில் அந்த வயதானவர் கீழே விழுந்தார். ஆனால், இதனை நாகார்ஜுனா கண்டுகொள்ளாதது,போல வீடியோ காட்சி பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வந்த நிலையில், வீடியோவை பார்த்த பலரும் இதனை கூட கண்டுகொள்ள மாட்டீர்களா? நாகார்ஜுனா ரொம்ப மோசம் என விமர்சிக்க ஆரம்பித்தனர்.
வீடியோ வைரலாகி விமர்சனங்கள் எழுந்த நிலையில், நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றையும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியீட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” இது நடந்திருக்கக் கூடாது என்று என் கவனத்துக்கு வந்தது!! நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்” என நாகார்ஜுனா கூறியுள்ளார்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…