விடாமுயற்சி – தி கோட்  எப்போது ரீலிஸ் ஆகிறது தெரியுமா?

vidaamuyarchi and the goat

தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்க காத்திருக்கும் திரைப்படங்களின் பட்டியலில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படமும், அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படமும் உள்ளது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என்பதற்கான தகவலை தற்போது பார்க்கலாம்.

விடாமுயற்சி

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் அஜித்துடன் திரிஷா, ரெஜினா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

கேப்டனை நினைத்து வடிவேலு அழுதிருப்பார்! சரத்குமார் பேச்சு! 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் என்பதால் அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தி கோட்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கோட்’ இந்த திரைப்படத்தில் ஸ்னேகா, மீனாட்சி, பிரபுதேவா, பிரசாந்த், யோகி பாபு, பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை எஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்ட்டர்களும் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில், இந்த திரைப்படம் வரும் ஜூன் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்