அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அமெரிக்காவில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அந்த படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொண்டு தனக்கான காட்சிகளை நடித்து கொடுத்து முடித்தார். இப்பொது படத்தின் அணைத்து படப்பிடிப்புகளும் பின்னணி பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், தி கிரே மேன் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நேற்று இய்குனர் ரூஸோ பிரதர்ஸ் வெளியிட்டனர். தனுஷும் தனது புகைப்படத்தை டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். புகைப்படத்தில் தனுஷ் கார் மீது ஸ்டைலாக சற்று ரத்த கரைகளுடன் இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், ஏற்கனவே தனுஷ் நடிப்பில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்மையில் தமிழ் பத்திரிகை தளங்களில் ஒன்றான ஆனந்த விகடன் குழுமத்தில் விகடன் இணையதளம் ஓர் கார்ட்டூன் சித்திரத்தை…
டெல்லி : இந்திய இருசக்கர வாகன மோட்டார் சந்தையில் யமஹா R3, KTM 390 RC, டிவிஎஸ் அப்பாச்சி RR310,…
சென்னை : தேசிய கல்வி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியலில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேசிய…
பாகிஸ்தான் : பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு நியூசிலாந்து அணி தயாராகி…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 25 ஆம் தேதி கோவை வருகிறார். அங்கு மாவட்ட…
சென்னை : உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வி…