காரில் கெத்தாக நிற்கும் தனுஷ்.! வைரலாகும் “தி க்ரே மேன்” போஸ்டர்.!

அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அமெரிக்காவில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அந்த படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொண்டு தனக்கான காட்சிகளை நடித்து கொடுத்து முடித்தார். இப்பொது படத்தின் அணைத்து படப்பிடிப்புகளும் பின்னணி பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், தி கிரே மேன் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நேற்று இய்குனர் ரூஸோ பிரதர்ஸ் வெளியிட்டனர். தனுஷும் தனது புகைப்படத்தை டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். புகைப்படத்தில் தனுஷ் கார் மீது ஸ்டைலாக சற்று ரத்த கரைகளுடன் இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The gray man #TheGrayMan @NetflixFilm July 22nd on Netflix @Russo_Brothers pic.twitter.com/yAXte77C2G
— Dhanush (@dhanushkraja) April 26, 2022
மேலும், ஏற்கனவே தனுஷ் நடிப்பில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025