ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த அளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடிமைப்பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் “ஸ்டெர்லைட் போராட்டம் மக்களை தூண்டிவிட்டு நடத்தப்பட்டது எனவும், நாட்டின் தேவையை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர்” எனவும் கூறினார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து, இயக்குனர் பா.ரஞ்சித்தும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்கள் அவரிடம் “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த பா.ரஞ்சித் ” ஆளுநர் ஆர்.என்.ரவி, தன்னுடைய வேலையை தவிர வேறு எல்லா வேலையையும் பார்த்து வருகிறார். அவரது போக்கு மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து ஏதாவது பேசி பொது சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். கவர்னரின் பேச்சு தவறுதான், அதை ஏற்க முடியாது” என காட்டத்துடன் பேசியுள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…