“கோட் கதை அப்படி இருக்கும்”..சவால் விட்டு சொல்லும் வெங்கட் பிரபு!
சென்னை : கோட் படம் இப்படி தான் போகும் எனக் கதையை யாராலும் யூகிக்கவே முடியாது என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
கோட் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், படம் பற்றி இயக்குனர் வெங்கட் பிரபு ஊடகங்களுக்கும், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டு வருகிறார். அப்படி தான் சமீபத்தில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் ‘கோட்’ கதையை யாராலும் யூகிக்கவே முடியாது எனக் கூறி எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறார்.
படத்தினுடைய டிரைலர் வெளியானதில் இருந்து இப்போது வரை பலருக்கும் புரியாத ஒரு விஷயம் என்னவென்றால் கோட் படம் எந்த மாதிரி கதைக்களம் கொண்ட படம்? என்பது தான். ஆனால், படத்தின் டிரைலரிலே படம் எந்த மாதிரி கதைக்களத்தைக் கொண்ட படம் என்பதைச் சொல்லிவிட்டேன் இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை எனப் பேட்டியில் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
படம் 3 மணி நேரத்திற்கு மேல் ரன்னிங் டைம் இருப்பதால் ஒரு வேலை குழப்பமாக இருக்குமோ எனவும் ரசிகர்கள் யோசித்துக்கொண்டு இருக்கும் நிலையில், வெங்கட் பிரபு அதற்கும் பாசிட்டிவாக பேசி இருக்கிறார். இது பற்றிப் பேசிய அவர் ” படம் கண்டிப்பாகப் போர் அடிக்காமல் எல்லாருக்கும் புரியும் படி, பிடிக்கும் படி நல்ல படமாக இருக்கும்” என பேசினார்.
படம் பார்க்கும்போது அடுத்ததாக என்னனென்ன நடக்கும் என யோசிக்கவே முடியாது…இதனை நோக்கி தான் கோட் படம் போய்க்கொண்டு இருக்கிறது என யாரும் யூகிக்கவே முடியாது இதற்கு நான் சவால் விடுகிறேன் எனவும் கூறி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை வெங்கட் பிரபு அதிகமாக்கினார். தொடர்ந்து பேசிய வெங்கட் பிரபு மங்காத்தா படம் மாதிரி கோட் படம் இருக்கும் என்பதையும் சூசகமாக வெளிப்படுத்தினர்.
கோட் படம் ரொம்பவே வேகமாக ஓடும் திரைக்கதையைக் கொண்ட படமாக இருக்கும். மங்காத்தா படம் எப்படி வேகமாகச் சென்றதோ அதே போலவே வேகமாக செல்லும். மங்காத்தா படத்தில் எமோஷனலான காட்சிகளை நான் வைக்கவில்லை. ஆனால், கோட் படத்தில் ஒரு குடும்பமாகப் பார்த்தால் எமோஷனலாக இருக்கவேண்டும் என்பதற்காக அப்படியான காட்சிகளை வைத்துள்ளேன்” எனவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். வெங்கட் பிரபு கூறியதை வைத்துப் பார்க்கையில் படம் எதோ பெரிதாகச் சம்பவம் செய்யப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.