THE GOAT அடுத்த சிங்கிள் எப்போது? ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த வெங்கட் பிரபு.!

thalapathy vijay and Venkat Prabhu

Venkat Prabhu: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் THE GOAT படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு `X’ தளத்தில் பதிவு.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘THE GOAT’ திரைப்படம் ரிலிஸுக்கு தயாராகி வருகிறது. டைம் ட்ராவல் படம் என்று கூறப்படும், இந்த படத்தில் விஜய் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார்.

படத்தில், மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், ஜெயராம் மற்றும் வைபவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனிடையே, இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘சென்னை 600028’ திரைப்படம் இன்றுடன் (ஏப்ரல் 27) 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டரைப் பகிர்ந்து நினைவு கூர்ந்தார்.

உடனே, ரசிகர்கள் GOAT படத்தின் அப்டேட் கேட்டு கமெண்ட்ஸ் பண்ண தொடங்கினர். அந்த வகையில், ரசிகர் ஒருவர் படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்ப, அதற்கு ஜூன் மாதம் என வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வெங்கட் பிரபு ஜூன் மாதம் என்று கூறியுள்ளதால், விஜய் பிறந்தநாளான ஜூன் 22ல் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்