இயக்குநர் ஷங்கர் கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார்.இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன.
இவர் முதல்வன்,ஜீன்ஸ் ,அந்நியன்,நண்பன்,எந்திரன்,2.0 ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் படங்கள் என்றாலே அனைத்தும் மிக அதிக பொருட் செலவில் தான் இருக்கும்.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 18 ந் தேதி தொடங்க பட்ட படம் “இந்தியன்2”. இந்த படத்தில் கமல்,காஜல் அகர்வால் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள்.இந்த படத்தை லைக்கா நிறுவனம் வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய 4 நாட்களிலே பாதியில் நின்று விட்டது. அதற்கு காரணம் கமல் அரசியல் செயல்பாடுகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார் என பல தகவல்கள் வந்தது.
அது ஒரு புறம் உண்மை என்றாலும் ஆனால் அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் படத்தில் கமலின் ஒப்பனை மற்றும் சில விசயங்களால் சற்று செலவு அதிகமாகும் என்று ஷங்கர் கேட்டவுடன் கடுப்பாகிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம்.
தயாரிப்பு உடனே,ஒப்பந்தம் தயாரித்து ஷங்கரிடம் கொடுத்துவிட்டார்களாம். அதில் ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் இந்தப்படத்தை எடுத்து முடிப்பேன் அதற்கு மேல் செலவானால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டால் படப்பிடிப்பை நடத்துவோம் இல்லையென்றால் இப்படியே போய்விடலாம் என்று சொல்லிவிட்டார்களாம். எனவே முதல் முறையாக இயக்குநர் ஷங்கருக்கு இப்படி ஒரு சோதனை வந்துள்ளது. அதில் ஷங்கரும் நீண்ட நாட்களுக்கு பின்னர் கையெழுத்து போட்டுள்ளார்.
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…