முதல் முறையாக இயக்குநர் ஷங்கருக்கு வந்த மிகப்பெரிய சோதனை ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின் தான் தொடங்கியது படப்பிடிப்பு என்ன கொடுமை சார் இது

Default Image
  • இயக்குநர் ஷங்கர் கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார்.
  • இவருக்கு முதல் முறையாக ஒரு படத்தில் ஒப்பந்தம் போட்ட பின்பு தான் படத்தை தொடங்குவோம் என தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டது.

இயக்குநர் ஷங்கர் கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார்.இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன.

இவர் முதல்வன்,ஜீன்ஸ் ,அந்நியன்,நண்பன்,எந்திரன்,2.0  ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் படங்கள் என்றாலே அனைத்தும் மிக அதிக பொருட் செலவில் தான் இருக்கும்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 18 ந் தேதி தொடங்க பட்ட படம் “இந்தியன்2”.  இந்த படத்தில் கமல்,காஜல் அகர்வால் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள்.இந்த படத்தை லைக்கா நிறுவனம் வருகிறது.

இந்த படத்தின்  படப்பிடிப்பு தொடங்கிய 4 நாட்களிலே பாதியில் நின்று விட்டது. அதற்கு காரணம் கமல் அரசியல் செயல்பாடுகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார் என பல தகவல்கள் வந்தது.

அது ஒரு புறம் உண்மை என்றாலும் ஆனால் அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் படத்தில்   கமலின் ஒப்பனை மற்றும்  சில விசயங்களால் சற்று செலவு அதிகமாகும்  என்று ஷங்கர் கேட்டவுடன் கடுப்பாகிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம்.

தயாரிப்பு  உடனே,ஒப்பந்தம் தயாரித்து ஷங்கரிடம் கொடுத்துவிட்டார்களாம். அதில் ஒரு குறிப்பிட்ட  தொகைக்குள்   இந்தப்படத்தை எடுத்து முடிப்பேன் அதற்கு மேல் செலவானால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டால் படப்பிடிப்பை  நடத்துவோம் இல்லையென்றால் இப்படியே போய்விடலாம் என்று சொல்லிவிட்டார்களாம். எனவே முதல் முறையாக இயக்குநர் ஷங்கருக்கு இப்படி ஒரு சோதனை வந்துள்ளது.  அதில் ஷங்கரும் நீண்ட நாட்களுக்கு பின்னர் கையெழுத்து போட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்