இசை புயலின் குரலில் “பொன்னியின் செல்வன்” முதல் பாடல்.! முழு விவரம் இதோ….

Default Image

1950-களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான மணி ரத்தனம் இயக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

ponniyin selvan 3

இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு படத்திற்கான முதல் பாடல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது பொன்னி நதி என்று தொடங்கும் இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானே பாடியுள்ளார். அந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த படம் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்