#image_title
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தா கோட்.படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மாளவிகா சர்மா, மோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதல் பாடல் அதாவது விசில் போடு என்று தொடங்கும் அந்த பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது படத்திற்கான பாடல் வெளியாகி இருக்கிறது.
இந்த பாடலை பிரபல பாடலாசிரியரான மதன் கார்க்கி எழுதியுள்ளார். பாடலை நடிகர் விஜய் தனது சொந்த குரலில் யுவன் இசையில் பாடி இருக்கிறார். பாடல் மிகவும் அருமையாக இருப்பதன் காரணமாக இந்த பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கோட் திரைப்படத்திற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது மூலமாக நடைபெற்று வருகிறது. படம் வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…