லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.! வீடியோ வெளியீட்டு அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று அங்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அதற்கான வீடியோ ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
We take a bow ❤️
Thank you to the amazing crew who poured their heart & soul into this project!
Huge respect to our dedicated crew whose hard work has brought the magic to life on screen ????#TheCrewBehindLEO#Thalapathy @actorvijay @Dir_Lokesh #Leo
— Seven Screen Studio (@7screenstudio) March 23, 2023
அதன்படி, தற்போது அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் ” லியோ படத்தில் பணியாற்றும் அனைவரும் படப்பிடிப்பில் நடந்த சம்பவளங்களை பற்றி பேசியுள்ளனர். இந்த வீடியோ 7 நிமிடம் இருக்கிறது.
மேலும் லியோ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது. படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.