பெரிய விளம்பரம்…ஃபைட் கிளப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
உறியடி விஜய் குமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கியுள்ளார். மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(டிசம்பர் 15-ஆம் தேதி) வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் இரண்டாவது நாளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
தொடக்க நாளுக்குப் பிறகு ஃபைட் கிளப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இந்திய அளவில் ரூ.2 முதல் ரூ.2.5 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அளவில் அதிக திரையரங்குகளை பெற்ற இந்த திரைப்படம் முதல் நாளில் இது மிகப்பெரிய வசூல் என்றே சொல்லலாம்.
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ‘g squad’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கும் முதல் படம் என்பதால், படத்திற்கான விளம்பரங்கள் அதிகமாக செய்யப்பட்டன. லோகேஷும் தனது தலைவர் 171 பட வேலைக்கு சற்று இடைவெளி கொடுத்துவிட்டு தனது தயாரிப்பு நிறுவன நிறுவனம் மூலம் வெளியிடும் முதல் படம் இது என்பதால் கடுமையாக உழைத்தார் என்றே சொல்லலாம்.
உறியடி படத்தின் மூலம் விஜய் குமாரின் புகழ் தமிழ் சினிமாவால் பெரிதளவில் பேசப்பட்டது. அந்த அளவுக்கு உறியடி திரைப்படம் அமைந்திருந்தது, அதே போல் இந்த படத்திற்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தது அதற்கு ஏற்றார் போல், முதல் நாளிலே இப்படம் 2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட்டை 7 கோடிதான், இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் மேலும் அதிகளவில் வசூலிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெறிக்கும் சண்டைக்காட்சிகள்! “ஃபைட் கிளப்” படத்தின் திரைவிமர்சனம்!
படத்தில் கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் மோனிஷா மோகன் மேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ‘g squad ‘ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.