பாலிவுட் வரை வெடித்த ரோலக்ஸ் தாக்கம்! ‘அனிமல்’ படத்தில் அசத்தல் என்ட்ரி?

AnimalMovie rolex reference

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோ நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 450 கோடி வசூல் செய்திருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.

அவர் வருவது படத்தில் கடைசி சில நிமிடங்கள் என்றாலும் அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களையும் விட சூர்யா நடித்த கதாபாத்திரத்தை தான் பலரும் பாராட்டினார்கள். ஏனென்றால், இதற்கு முன்பு சூர்யா இந்த மாதிரி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை.

சிவகார்த்திகேயன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் லோகேஷ்.! தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…

முதன் முதலாக சூர்யா இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததை பார்த்ததும் பலரும் சூர்யாவை பார்த்து மிரண்டு போனார்கள். இந்த கதாபாத்திரத்தினுடைய ரெபரென்ஸ் ஆக பலரும் அதே கெட்டப்பில் கூட படங்களில் வந்திருந்தார்கள். குறிப்பாக அடியே படத்தில் ஜிவி பிரகாஷ் கூட ரோலக்ஸ் கெட்டப்பில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் தாக்கம் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட் சினிமா வரை சென்றுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான அனிமல் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தினுடைய ரெபரென்ஸ் இடம்பெற்றுள்ளது. அனிமல் படத்தின் இறுதிக்காட்சியில் நடிகர் ரன்பீர் கபூர் ரத்தம் தெறிக்க ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல சிகரெட் பிடித்து கொண்டு வருகிறாராம்.

அந்த காட்சிகள் அப்படியே ரோலக்ஸ் கதாபாத்திரத்தினுடைய தாக்கம் தான் என நெட்டிசன்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான இந்த அனிமல் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்