பிரபல நடிகருக்கு அடிபட்டதால் ரூ.300 கோடி பட்ஜெட் படம் பாதியில் நின்றது
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கான் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் அவர் இயக்கிய “பாகுபலி” திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த திரைப்படம்.
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது “பாகுபலி “படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை ரூ. 300 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கான் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
சமீபத்தில் நடிகர் ராம் சரண் உடற் பயிற்சி செய்யும் போது அவரது கையில் அடிபட்டுள்ளது. அதனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் அவர் குணமாகும் வரை நடக்காது என படக்குழு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் ரசிகர்கள் மத்தியில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்து வருவதக்கவும், அவருக்காக படப் பிடிப்பை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால்,இப்படம் ராம் சரணுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என புரளிகள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
இப்படத்திற்கு பெயர் “ராம ராவண ராஜ்யம்” என வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.