“நல்ல கருத்து சொல்ற படம்” மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி! கண்கலங்கிய பிரதீப்.!

டிராகன் படம் வெளியான நிலையில், படத்துக்குள்ள ஒரு பெரிய பூசிணிக்காவ மறைச்சு வச்சி இருக்கோம், படத்தை பாருங்க தெரியும் என்று இயக்குநர் சுவாரஸ்ய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

Pradeep Ranganathan

சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

அனுபமா பரமேஸ்வரன் மற்றும் காயத்ரி லோஹர் ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஈர்க்கக்கூடிய கதைக்களம், குறிப்பாக பிரதீப் நடிப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சொல்லப்போனால், டிராகன் இளைஞர்களை கவரும் ஒரு பொழுதுபோக்கு படமாக உள்ளது. பிரதீப்பின் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்து என்றால், நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கதையை ரசிப்பவர்களுக்கும் இது படம் பிடிக்கலாம். இந்த நிலையில், இந்த படத்தை படக்குழு மொத்தமும் இணைந்து இப்படத்தை திரையரங்கில் கண்டு மகிழ்ந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் படம் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அதில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “இது ஒரு நல்ல படம், கருத்துள்ள படம். இந்த படத்தை எனக்கு கொடுத்தற்கு என் நண்பனுக்கு நன்றி”  என்று கூறி கண் கலங்கினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்றாங்க, ரொம்ப சந்தோஷம். படத்துக்குள்ள ஒரு பெரிய பூசிணிக்காவ மறைச்சு வச்சி இருக்கோம். படத்தை பாருங்க தெரியும்” என்று கூறினார். மேலும் அவர், “நானும் பிரதீப்பும் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளோம். சிம்பு சார் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இந்தப் பணிகள் தொடங்கும். படம் மூன்று ஆண்டுகளுக்குள் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்