சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆகஸ்ட்-15ல் வெளியாகிறதா?
சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆகஸ்ட்-15ல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவது கடந்த ஏப்ரல்-14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்து மே-3ம் தேதி வரை உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், படப்பிடிப்புகள் மற்றும் வெளியாகவிருந்த திரைப்படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருந்த சூரரை போற்று திரைப்படம், கொரோனா ஊரடங்கள் தள்ளிப்போன நிலையில், இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.