Vanangaan trailer [File Image]
வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ திரைப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம்மே முடிவடைந்தாலும், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே, படத்தின் டிரெய்லர் ஜூலை 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அருண் விஜய் மற்றும் படக்குழு தங்களது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
முதலில் இப்படத்தில் சூர்யா நடித்து கண்டிருந்தார், சில கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்திலிருந்து விலகிய நிலையில், அருண் விஜய் கதாநாயகனாக நடித்து முடித்திருக்கிறார். நீண்ட நாள் கழித்து பாலா இயக்கம் மற்றும் வணங்கான் ட்ரைலர் எப்படி இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார், சமுத்திரக்கனி மற்றும் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், ரிதா, சாயா தேவி, பாலா சிவாஜி, சண்முகராஜன், யோகன் சாக்கோ, கவிதா கோபி, பிருந்தா சாரதி, மை பா நாராயணன், அருள்தாஸ் மற்றும் முனிஷ் சிவகுருநாத் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு மேற்கொள்ளும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸுடன் இணைந்து சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…