சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!
Kottukkaali: நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில், இயக்குனர் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள படம் கொட்டுக்காளி. சமீபத்தில் நடைபெற்ற 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக ‘கொட்டுக்காளி’ படம் திரையிடப்பட்டது.
READ MORE – தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு?
இதில், சூரி உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்றனர். இப்படத்திற்கு வெளிநாட்டினர் மத்தியில் கிடைத்த வரவேற்பு குறித்த வீடியோவை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கொட்டுக்காளி படம் முதல் சர்வதேச அரங்கிற்கு அரங்கிற்கு சென்றதற்கும், மறக்க முடியாத தருணங்களுக்கு பெர்லினுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Grateful for our #Kottukkaali‘s first international stage at @berlinale, and the incredible response has left a lasting imprint in our hearts. Thank you for the unforgettable moments.#Kottukkaali #KottukkaaliAtBerlinale #Berlinale #BerlinaleForum #BerlinaleForum2024… pic.twitter.com/VwDH54zFEf
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 28, 2024
READ MORE – புதுப்படத்துக்கு சிம்பு கேட்ட சம்பளம்? தெறித்தோடிய பிரபல தயாரிப்பு நிறுவனங்கள்?
இதன் மூலம் நடிகர் சூரிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. ஏற்கனவே, விடுதலை படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். தற்பொழுது சில பெரிய படங்களில் கமிட்டாகி நடித்து முடித்துள்ளார். கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு 16 பிப்ரவரி 2024 அன்று திரையிடப்பட்டது. இதன் மூலம் இப்படம் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
READ MORE – அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்!
இதற்கிடையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, பி.எஸ்.வினோத்ராஜின் முதல் திரைப்படமான கூழாங்கல் திரைப்படம், சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில் (IFFR) புலி விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் அவரது இரண்டாவது படமான கொட்டுக்காளி திரையிடப்பட்டுள்ளது.