நடிகர் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படங்களின் அப்டேட்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில், ‘இந்தியன் 2’படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியானது.
தற்போது, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 234வது படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று காலை கமலின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக நாயகன் படத்திற்காக இணைந்த கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரிஜினல் நாயகன் மீண்டும் வரார் என்கிற போல் மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல படம் கண்டிப்பாக தரமாக இருக்கும் என்று தெளிவாக தெரிகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விக்ரம் படத்தில் நட்சத்திரங்கள் பட்டாளம் நடித்ததோ அதே போல் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்கள்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…
அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம்…
பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…