மாமன்னன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.
பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விறு விறுப்பாக சேலம் மாவட்டத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதால் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டே படத்தை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் முதல் பாடல் மற்றும் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025