Actor Vijay [File Image]
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘லியோ’. தொடர் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மாஸ்டர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.
நாளுக்கு நாள் இந்த படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வராதா என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று ஓர் அதிர்ச்சி செய்தி வெளியானது.
அதாவது விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் அதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும். அதில் விஜய் பேசும் பேச்சும், குறிப்பாக அவர் கூறும் குட்டி கதைகளும் ரசிகர்களின் ‘ஆல் டைம் ஃபேவரட்’ அதேபோல இந்த முறையும் லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறும். தளபதி விஜயின் குட்டி கதை கேட்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதற்காக செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது. இதற்கான டிக்கெட் முன்பதிவு பற்றிய விவரங்கள் எல்லாம் இணையத்தில் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று பட தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு அதிக அளவில் ‘டிமாண்ட்’ இருந்த காரணத்தாலும், ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தாலும், ரசிகர்கள் நலன் கருதி இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை என்றும், இதில் எந்தவித அரசியல் தலையீடோ, மற்ற வகையிலான தலையிடோ எதுவுமில்லை என படத்தயாரிப்பு நிறுவனமான செவென்த் ஸ்க்ரீன் விளக்கம் அளித்துள்ளது.
தங்களது ஆஸ்தான ஹீரோவை இசை வெளியீட்டு விழா மூலம் நேரில் காணலாம். அவரது பேச்சை நேரடியாக கேட்கலாம் என்று பெருவாரியான கனவுகளோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…
சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில்…
சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து…
சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…