தளபதி விஜயின் ‘குட்டி கதை’க்கு நோ.! இசை வெளியீட்டு விழாவுக்கு நோ.! பட நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு.!

Actor Vijay

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘லியோ’. தொடர் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர்  மாஸ்டர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

நாளுக்கு நாள் இந்த படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வராதா என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று ஓர் அதிர்ச்சி செய்தி வெளியானது.

அதாவது விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் அதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும். அதில் விஜய் பேசும் பேச்சும், குறிப்பாக அவர் கூறும் குட்டி கதைகளும் ரசிகர்களின் ‘ஆல் டைம் ஃபேவரட்’ அதேபோல இந்த முறையும் லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறும். தளபதி விஜயின் குட்டி கதை கேட்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதற்காக செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது. இதற்கான டிக்கெட் முன்பதிவு பற்றிய விவரங்கள் எல்லாம் இணையத்தில் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று பட தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில், முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு அதிக அளவில் ‘டிமாண்ட்’ இருந்த காரணத்தாலும், ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தாலும், ரசிகர்கள் நலன் கருதி இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை என்றும், இதில் எந்தவித அரசியல் தலையீடோ, மற்ற வகையிலான தலையிடோ எதுவுமில்லை என படத்தயாரிப்பு நிறுவனமான செவென்த் ஸ்க்ரீன் விளக்கம் அளித்துள்ளது.

தங்களது ஆஸ்தான ஹீரோவை இசை வெளியீட்டு விழா மூலம் நேரில் காணலாம். அவரது பேச்சை நேரடியாக கேட்கலாம் என்று பெருவாரியான கனவுகளோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்