பேசவே வேண்டாம் கீழே போங்க! அனுபமாவை அவமானப்படுத்திய ரசிகர்கள்!

Published by
பால முருகன்

Anupama Parameswaran : பேசவே வேண்டாம் கீழே போங்க என ரசிகர்கள் அனுபமாவை அவமானப்படுத்தி உள்ளார்கள்.

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தெலுங்கில் தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த மார்ச் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இன்னும் சில திரையரங்குகளில் கூட படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் எதிர்பார்த்த அளவிவிற்கு பெரிய வெற்றியை பெற்று இருப்பதால் படத்திற்கான சக்ஸஸ் மீட் நடத்தப்பட்டது. அதில் ஜீனியர் என்டிஆர், திரிவிக்ரம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அப்போது நிகழ்ச்சியில் பேசுவதற்கு மேடைக்கு வந்த நடிகை அனுபமா பரமேஸ்வரனை அங்கு இருந்த ரசிகர்கள்  அவமானப்படுத்திய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடைக்கு அனுபமா பரமேஸ்வரன் வந்தவுடனே ரசிகர்கள் அனைவரும் கூச்சலிட தொடங்கினார்கள். பிறகு நான் இரண்டு நிமிடம் மட்டும் பேசிக்கொள்ளவா? என்று அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களை பார்த்து கேட்டார்.

உடனடியாக அணைத்து ரசிகர்கள் சரி பேசுங்கள் என்று கூறுவார்கள் என பார்த்தல் நீங்கள் பேசவே வேண்டாம் கீழே போங்க என்று கூறினார்கள். ரசிகர்கள் இப்படி கூறியவுடன் அனுபமா பரமேஸ்வரன் முகமே சற்று மாறிவிட்டது. இருந்தாலும் அந்த வேதனையை மனதிற்குள் வைத்து கொண்டு சாந்தமாக நின்று கொண்டு இருந்தார்.  பிறகு நிகழ்ச்சிக்கு வந்த ஜீனியர் என்டிஆர்க்கு மட்டும் நன்றியை தெரிவித்துவிட்டு கீழே இறங்கி சென்றார். இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

Recent Posts

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

6 minutes ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

2 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

2 hours ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

2 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

2 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

3 hours ago