அவரு என்னை விட மூத்தவர்! விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை?

vijayakanth

Vijayakanth : விஜயகாந்த் தன்னை விட வயதில் மூத்தவர் என கூறி பிரபல நடிகை அவருடன் நடிக்க மறுத்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் எந்த அளவிற்கு பீக்கில் இருந்தார் அவருடைய படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்தது என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். கிராம புறங்களில் எல்லாம் அந்த சமயம் இவருடைய படங்கள் தான் அதிக அளவில் வசூல் செய்தது.

விஜயகாந்த் பீக்கில் இருந்த நேரத்தில் எல்லாம் அவருடன் பல முன்னணி நடிகைகள் கூட விஜயகாந்த் உடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது உண்டு. அதைப்போலவே விஜயகாந்துடன் நடிக்க சில நடிகைகள் மறுப்பு தெரிவித்ததும் உண்டு. அப்படி தான் நடிகை லட்சுமியும் ஒரு சமயம் நடிக்க மறுப்பு தெரிவித்தாராம்.

அன்னை என் தெய்வம் படத்தில் விஜயகாந்திற்கு அம்மாவாக நடிக்க நடிகை லட்சுமியிடம்  படத்தின் தயாரிப்பாளர் மற்றும் வடிவுக்கரசி பேசினார்களாம். கதை எல்லாம் கேட்டுவிட்டு  விஜயகாந்த் என்னை விட வயதில் மூத்தவர் அவருக்கு எப்படி நான் அம்மாவாக நடிக்க முடியும் அதெல்லாம் சரியாக வராது நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று விஜயகாந்துடன் நடிக்க லட்சுமி மறுத்துவிட்டாராம் .

அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே ஆர் விஜயாயிடம் பேசி உடனே கே.ஆர். விஜய் சம்மதம் தெரிவித்து விட்டாராம் . அந்த நேரத்தில் அதற்கு அட்வான்ஸ் தொகையும் கொடுத்துவிட்டு சம்பளமும் பேசி முடித்து விட்டார்களாம். இந்த தகவலை பிரபல நடிகையான வடிவுக்கரசி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  விஜயகாந்த் உடன் லட்சுமி நடிக்க மறுத்துள்ள தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்