காஞ்சனா 3 படத்தில் நடித்த நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்
காஞ்சனா 3 படம் உலகம் முழுவதும் வெளியாகி தற்போது பல திரையங்குகளில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது.இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தவர் நடிகை ஜானே கட்டாரியா. ரஷ்யா நாட்டை சேர்ந்த இவர் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் தங்கி பட வாய்ப்புகளை தேடி கொண்டிருக்கிறார்.
இதையடுத்து சமூக வலைதளத்தின் மூலம் நடிகை ஜானே கட்டாரியாவை லுங்கி விளம்பர நடிகர் ரூபேஷ் குமார் தொடர்பு கொண்டு விளம்பரத்தில் நடிக்க வைப்பதாக கூறி போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.
அதற்கு பிறகு என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விளம்பர நடிகர் ரூபேஷ் குமார் நடிகை ஜானே கட்டாரியா வற்புறுத்தியுள்ளார். இது குறித்து ஜானே கட்டாரியா சென்னை கமிஷினர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி ரூபேஷ் குமாரை கைது செய்துள்ளார்கள்.